சென்னை:

மிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை உயர்ந்துள்ளதை  தொடர்ந்து ஆவின் பால் விலையையும் உயர்த்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார்.

தமிழகத்தில் இன்று சில தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 வரை உயர்த்தப் பட்டுள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் பால் விலையை உயர்த்துவது  குறித்து தமிழக அரசு பரிசிலீத்து வருவதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

உலக பால் தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சர், பால் விலை உயர்வு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் முதலமைச்சரிடம் பேசி ஆவின் பால் கொள்முதல் விலையை, விரைவில் கூட்ட உள்ளதாக கூறினார்.

பொதுமக்களை பாதிக்காத வகையில் பால் விற்பனை விலையை உயர்த்த தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார். பால் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள செந்தில் பாலாஜி, நாம் எப்போதும் விலை உயர்வை பற்றி பேசுகிறோம். நடைமுறையையும் சிறிது யோசித்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.