டெல்லி

ஆம் அத்மி கட்சியினர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பாஜக தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.

கடந்த 13 ஆம் தேதி காலை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் இது குறித்து டெல்லி காவ்ல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சுவாதி மாலிவால் தனது புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை ஏழெட்டு முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார். அவர், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளில் பிபவ் குமார் தாக்கியதாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி காவல்த்றையினர் நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதன் பின்னணியில் பா.ஜ.க.வின் சதி உள்ளது என ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறது. முதலர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரும், மாலிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ”

இது தேர்தல் நேரம்.  அதனால், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு இருக்க கூடும். பா.ஜ.க.வினருடனான அவருடைய தொலைபேசி பதிவுகள், உரையாடல்கள் மற்றும் சாட்டிங்குகளை விசாரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பின்னணியில் பா.ஜ.க. இருக்கும் சாத்தியம் உள்ளது”

என்று தெரிவித்து உள்ளார்.

இன்று பா.ஜ.க. தலைமை அலுவலகம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர்னர். நேற்று இதனை கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்., முற்றுகை போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.எனவே, பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தடையை மீறி ஆம் ஆத்மி கட்சியினர் பா.ஜ.க. தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவாலை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.