சென்னை: பிரபல இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 44.
தமிழ் திரைப்பட இயக்குநரான தாமிரவின் இயற்பெயர் சையத் ராவுத். நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த இவர், மதுரை யுனிவர்சிட்டியில் ஜர்னலிசம் படித்தவர். ‘ஆண் தேவதை’, ‘ரெட்டச்சுசூழி’ போன்ற படங்களை இயங்கி உள்ளார். பாலசந்தர் இயக்கி டிவி தொடர்களுக்கு வசனம், திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் பல வெப்சிரிஸ்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு பிரபல தமிழ் இயக்குனர்கள் கே. பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தினை இயக்கினார். இதையடுத்து இவர் நடிகர் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் ஆண் தேவதை படத்தினையும் இயக்கியுள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக தாமிரா இவர் இன்று சிகிச்சைஇன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதை மருத்துவமனை அறிவித்துள்ளது.