பஞ்சாப்:
ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து உருவான ஆம் ஆத்மி கட்சி என்று பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.

பஞ்சாபின் கோட்காபுராவில் ‘நவி சோச் நவா பஞ்சாப்’ பேரணியில் உரையாற்றிய பிரியங்கா காந்தி வத்ரா, ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து உருவான ஆம் ஆத்மி கட்சி என்றும், டெல்லியில் கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள் என்ற பெயரில் எதுவும் இல்லை. அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் பற்றிய உண்மையை அறிவது முக்கியம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  கடந்த 5 ஆண்டுகளாக பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறோம். இந்த அரசு பஞ்சாப்பில் இருந்து இயக்கப்படுவதை நிறுத்தி விட்டது.  அதற்கு பதிலாக டெல்லியில் இருந்து இயக்கப்பட்டது. காங்கிரஸ் அல்ல, பாஜக. இந்த மறைக்கப்பட்ட கூட்டணி தற்போது பகிரங்கமாக வெளிவந்துள்ளது. சன்னியை முதல்வராக்கியதற்கு இதுதான் காரணம் என்று அவர் தெரிவித்தார்.