அயோத்தி வழக்கில்  அத்வானியிடம் ஆயிரம் கேள்விகள்..

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ. 32 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கு லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பா.ஜ.க. முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி ஆகியோர் ஏற்கனவே இந்த வழக்கில் சாட்சியம் அளித்து விட்டனர்.
இந்த நிலையில் முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி , சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சாட்சியம் அளித்தார்.
டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக சாட்சியம் அளித்த அத்வானியிடம் ஆயிரத்து 50 கேள்விகள் கேட்கப்பட்டன.
ஒவ்வொரு கேள்விக்கும் அவர் நிதானமாக பதில் அளித்தார்.
‘’பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எனது பெயர் , அரசியல் காரணங்களுக்காக தேவை இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது’’ என்று அத்வானி தெரிவித்தார்.
4 மணி நேரம் 40 நிமிடங்கள் சாட்சியம் அளித்த அத்வானி,’’ பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை’’ என மறுத்தார்.
-பா.பாரதி.