சென்னை :
போலி இ-மெயில் மூலம் மோசடி செய்ததாக, யுடியூப் சேனல் நிர்வாகி மாரிதாஸ்மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் தொடர்பாக, தனது யுடியூப் சேனரில் மாரிதாஸ் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதையடுத்து, தனியார் தொலைக்காட்சி நிர்வாகம்,   மாரிதாஸ் மீது சென்னை நகர குற்றவியல் போலீசில்  புகார் மனு அளித்தது.
இந்த மனுவில்,  ‘தன் மீதும், தனது செய்தி சேனல் மீதும் இட்டுக்கட்டிய செய்திகளை, உண்மைக்கு புறம்பாக மாரிதாஸ் என்பவர் இ மெயில் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரை பெற்றுக்கொண்ட  காவல்துறை, இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. அதையடுத்து,  5 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாரிதாஸ்,  தனக்கு வந்த இமெயிலையே தான் வெளியிட்டதாகவும் அதனை போலி என்றால், அதை போலியாக உருவாக்கி அனுப்பியவர்களை போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.