டில்லி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில்  இன்று முரளி மனோகர் ஜோஷி விடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜர் ஆன நிலையில் நாளை அத்வானி ஆஜர் ஆக உள்ளார்.

கடந்த 1992 ஆம் வருடம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவகர்களால் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது.    மசூதி இடிப்பு குறித்த வழக்கு இன்னும் நடந்துக் கொண்டு இருக்கிறது.   இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி மற்றும் அத்வானி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இன்று வழக்கு விசாரணை நடந்தது.

இதில் மூத்த பாஜக தலைவரான முரளி மனோகர் ஜோஷி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜர் ஆகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார்.   தற்போது சுமார் 86 வயதாகும் முரளி மனோகர் ஜோஷி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அளித்த வாக்குமூலத்தைச் சிறப்பு நீதிபதி ஏஸ் கே யாதவ் பதிவு செய்துள்ளார்.

முன்னாள் துணைப் பிரதமரும் மற்றொரு மூத்த பாஜக தலைவருமான அத்வானிக்கு தற்போது 92 வயதாகிறது.  அவர் தனது வாக்குமூலத்தை நாளை அதாவது வெள்ளிக்கிழமை அன்று வீடியோ கானஃபரன்ஸ், மூலம் அளிக்க உள்ளார்.