அயோத்தி:
யோத்தி ராமர் கோயிலின் உயரம் திட்டமிட்டதை விட மேலும் 20அடி உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அயோத்தி நிலம் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து,  கோவில் கட்டுவதற் கான பணிகளை மத்தியஅரசு முடுக்கி விட்டது. ஆனால், கொரோனா காரணமாக பணிகள் முடங்கிய நிலையில், வரும் ஆகஸ்டு 5ந்தேதி கோவில் கட்டுவதற்கான கால்கோள் விழா (பூமி பூஜை) நடைபெற உள்ளது.

முன்னதாக கடந்த 1988ம் ஆண்டு ராமர்கோவில் வடிவமைப்பு திட்டமிடப்பட்டது. தற்போது அதை விட மேலும்  20 அடி அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அயோத்தி ராமர் கோவிலின் முதன்மை வடிவமைப்பாளரான சோம்புராவின் மகனான, நிகில் சோம்புரா கூறியுள்ளதாவது,
ராமர்  கோவிலின் வடிவமைப்பு திட்டமிடப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதனால் அதன் உயரம் உள்பட பல வடிவமைப்புகள் மாற்றப்பட இருக்கிறது. இந்த திருத்தப்பட்ட வடிவமைப் பின்படி, கோயிலின் உயரம் 141 அடியிலிருந்து, 161 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன்  கூடுதலாக இரண்டு மண்டபங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. முந்தைய வடிவமைப்பின் அடிப்படையில் செதுக்கப்பட்ட அனைத்து தூண்களும், கற்களும் தற்போது பயன்படுத்தப்படும்.
கோவில் கட்டுமானப் பணிகளை எல்அல்டி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. பூமி பூஜை போடப்பட்டதும்,  கட்டுமான பணிகள் தொடங்கிவிடும்.  சுமார்  3 முதல் 3.5 வருடத்திற்குள் கோவில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக,  மூன்று நாட்கள் முன்னதாக வேத சடங்குகள் நடைபெறும். அதன் பின்னர், 40 கிலோ எடையிலான வெள்ளி செங்கல் கொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து முக்கிய விஜயபிக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.