ஆடியில் வழிபட்டால்… பிரிந்த தம்பதி சேருவர்!

திருமால்பூர் (அஞ்சனாட்சி) கருணை நாயகியின் கருணை
ஆடி மாதத்திலும், நவராத்திரி காலங்களிலும், மார்கழியிலும் ஸ்ரீஅஞ்சனாட்சி என்கிற கருணை நாயகியைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தடைப்பட்ட திருமணம் நடைபெற வேண்டுமே எனத் தவிப்பவர்களும், கல்யாணமாகி பல வருடங்களாகியும் குழந்தை வரம் இல்லையே என ஏங்குபவர்களும், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுப் பிரிந்து வாழ்பவர்களும் இங்கு வந்து வேண்டிக்கொண்டு, சீக்கிரமே தங்கள் பிரச்னைகள் தீர்ந்துபோக, மீண்டும் வந்து நெகிழ்ச்சியும் கண்ணீருமாகத் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.
இங்கு வந்து அம்பிகையை மனமுருகப் பிரார்த்தித்துவிட்டு, ஸ்ரீமணிகண்டீஸ்வரரையும் வேண்டிக்கொண்டால், பாவங்கள் விலகும்; தடைகள் அகலும்; விரைவில் தாலி பாக்கியம் கிடைக்கும்.
 சக்தி சொரூபமாக நிற்கும் அம்பாள், இங்கே சிவனாருக்கு இணையாகவும் நின்று தரிசனம் தருவதாகச் சொல்கிறது புராணம். எனவே, அம்பாளை எப்போது, எந்த நாளில் வேண்டுமானாலும் வணங்கித் தொழலாம். 
ஆனாலும், சக்திக்கு உகந்த ஆடி மாதத்தில் அம்பாளைத் தரிசிப்பது, கூடுதல் பலனைக் கொடுக்கும்

[youtube-feed feed=1]