மும்பை: மும்பையில் இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் இருந்து கொரோனா பாதிப்பு நோட்டீஸ் அகற்றப்பட்டது.
பாலிவுட் உலகின் பிரபல நடிகை ரேகா. மும்பையில் உள்ள அவரது பங்களாவில் பணியாற்றும் பாதுகாவலருக்கு ஒரு வாரம் முன்பு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து ரேகாவின் பங்களாவுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வீட்டின் முன் அதற்கான நோட்டீசும் ஒட்டப்பட்டது. இந் நிலையில், ரேகாவின் மும்பை பங்களாவில் இருந்த நோட்டீசை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இன்று அகற்றினர்.
Patrikai.com official YouTube Channel