மும்பை:
இன்டிகோ விமான நிறுவனம் 10 சதவிகிதம் ஊழியர்களை நீக்குவதாக அறிவித்து உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ரோனோஜாய் தத்தா, இன்டிகோ வரலாற்றில் முதன் முறையாக இதுபோன்ற கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடிய முடிவை ஏற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். கொரோனா முடக்கம் காரணமாக, கடந்த ஆறு மாதங்களில் நிறுவனத்தின் வளர்ச்சி மிகப்பெரிய இறக்கம் ஏற்பட்டதன் அடிப்படையில், ஊழியர்களில் 10 சதவிகிதம் பேரை நீக்க முடிவு செய்துள்ளோம். பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே வலியுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel