சென்னை:
மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே திமுக இன்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்துகிறது என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். மேலும், தமிழகம் முழுவதும் விரைவில் ரேசன் கடைகளில் முகக்கவசம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், மின்சார பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் மின் கட்டணம் எகிறியிருப்பதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஆனால், மின் கட்டணத்தை தமிழகஅரசு கூட்டி வசூலிப்பதாக திமுக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் இன்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கறுப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இநத் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டத்தில் இறங்கியுள்ளது. மின்கட்டணம் குறித்து அமைச்சர் தங்கமணி விவரமாக விளக்கம் அளித்துள்ளார்.
இருந்தாலும், தேவையின்றி திமுக போராட்டம் நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், விரைவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாஸ்க் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel