ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி வைரஸுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது
ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தடுப்பு மருந்து சோதனைகள் 1,077 நோயாளிகளின் மீது நடத்தப்பட்டது. ஊசி மூலம் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்களின் இரத்தத்தில், மருந்து கொடுக்கப்படாதவர்களை விட வைரஸை எதிர்த்து போராடும் திறன் கொண்ட ஆன்டிபாடிகள் மற்றும் குறிப்பிட்ட கொரோனா வைரஸுக்கு மட்டுமே எதிரான தனித்துவ T-செல்களும் அதிக அளவில் உருவாகியிருந்தது. எனவே இந்த தடுப்பு மருந்து மிகவும் திறன்வாய்ந்ததாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும், குறிப்பாக மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. இதன் பாதுகாப்புத் திறனை மேலும் உறுதிப்படுத்தும் சோதனைகள் நடந்து வருகின்றன. அதற்கு முன்னரே இங்கிலாந்து சுமார் 100 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகள் வேண்டி ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தடுப்பு மருந்து எவ்வாறு வேலை செய்கிறது?
ChAdOx1 nCoV-19 எனப்படும் இந்த தடுப்பு மருந்து முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது சிம்பன்ஸிகளில் சளியை ஏற்படுத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வைரஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தினால் இது கொரோனா வைரஸைப் போல “தோற்றமளிக்கும்” ஆனால், மக்களுக்கு தொற்றுநோய்களை ஏற்படுத்தாது. கொரோனா வைரஸின் செல் சவ்வின் மேற்புறமுள்ள கொத்து போன்ற “ஸ்பைக் புரதமே” இதுவாகும். இந்த புரதமே வைரஸ் நமது T-செல்களின் மீது பற்றிக் கொள்ளவும், செல் சவ்வை ஊடுருவி செல்லுக்குள் நுழைய வழியேற்படுத்திக் கொடுக்கவும் பெரிதும் உதவுகிறது. சுருக்கமாக சொல்வதானால், நமது T-செல்களை ஆக்கிரமிக்க வைரசால் பயன்படுத்தப்படும் முக்கியமான கருவியாகும் – எனவே இந்த புரதத்தில் சிறிய மரபணு மாற்றம் செய்யப்பட்டு, அதை மட்டும் ஊசி மூலம் செலுத்தும் போது ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்ட விளைவகளை உண்டாக்க முடியும். அதே சமயம் இந்த புரதம் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தினால் அடையாளம் கண்டறிய வைத்து அதற்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாக வழிவகை செய்யப்படுகிறது. இப்போது நிஜ வைரஸ் தொற்று ஏற்படுமானால், எளிதில் அடையாளம் காணப்பட்டு அழித்து நீக்கப்படும்.
ஆன்டிபாடி மற்றும் T-செல்கள் என்பது என்ன?
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உருவாக்கம் மற்றும் அதன் செயல்திறனில் அனைவரின் கவனமும் ஆன்டிபாடிகள் மீதே இருந்தது. ஆனால் இவை நமது நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் பாதுகாப்பின் ஒரு பகுதி மட்டுமே. வைரஸ்கள் உள்நுழைந்து பற்றிக் கொள்ளும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்களினால் உருவாக்கப்படும் சிறிய புரதங்களே ஆன்டிபாடி எனப்படுகிறது. இந்த ஆன்டிபாடிகள் வைரஸின் நோயுண்டாக்கும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட புரதங்களுடன் இணைந்து அதனை செயலிழக்கச் செய்யும் திறன் வாய்ந்தது ஆகும். இதன் மூலம் வைரஸின் நோயுண்டாக்கும் திறனை முடக்க முடியும். T-செல்கள், ஒரு வகை இரத்த வெள்ளை செல்கள் ஆகும். இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்வழி செயல்படும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகின்றன. மேலும் உடலின் எந்த பகுதியில் எந்தவகை செல்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து அவற்றை அழிக்க முடிகிறது. கிட்டத்தட்ட அனைத்து திறனுள்ள தடுப்பு மருந்துகளும் ஆன்டிபாடி மற்றும் T-செல் வழி செயல்பாடுகளைத் தூண்டும்.
நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து கொடுத்து 14 நாட்களுக்குப் பிறகு இரத்தத்தில் T-செல்களின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்தது கண்டறியப்பட்டது. மேலும், வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி அளவு 28 நாட்களுக்குப் பிறகு உயர்ந்தது. ஆனால் அவற்றின் செயல்திறன் எவ்வளவு காலம் வரை நீடிக்கலாம் என்பதைப் புரிந்துக் கொள்ளும் அளவுக்கு இந்த ஆய்வுகள் நீண்டகாலம் செய்யப்படவில்லை. ஆக்ஸ்போர்டு ஆய்வுக் குழுவின் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் பிபிசியிடம் கூறும்போது, “வைரஸை செயலிழக்கச் செய்யும் திறனுள்ள ஆன்டிபாடிகள் மற்றும் டி-செல்கள் இரண்டின் அளவும் அதிகரித்துள்ளதை நாங்கள் காண்கிறோம் என்பதால் இன்று வெளியிடப்பட்ட முடிவுகளில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” மேலும் கூறுகையில், “இதன்படி எங்களது தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானவை மற்றும் செயல்திறன்மிக்கவை,” என்றும் கூறினார்.
இந்த ஆய்வில், எல்லோரும் தெரிந்து கொள்ள விரும்பும் முக்கிய கேள்வி என்னவென்றால், தடுப்பு மருந்தின் பாதுகாப்புத் தன்மை மற்றும் அதன் செயல்திறன் ஆகும். நாங்களும் அதை கண்டறியவே காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார். இந்த ஆய்வில் பங்கேற்ற மொத்த நோயாளிகளில் 90% பேர் முதல் டோஸ் தடுப்பு மருந்திலேயே வைரஸை செயலிழக்கச் செய்யும் ஆன்டிபாடிகளை உருவாக்கியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் வெறும் பத்து பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ்கள் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் (100%) வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை பெற்றிருந்தனர். “முழுமையான பாதுக்காப்பை உருவாக்க எவ்வளவு டோஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் இரண்டாவது டோஸ் மூலம் தனித்துவமான செயல்திறனை அதிகரிக்க முடியும்” என்று பேராசிரியர் பொல்லார்ட் பிபிசியிடம் கூறினார்.
இது பாதுகாப்பானதா?
ஆம், ஆனால் மிக சிறிய அளவிலான பக்க விளைவுகள் உண்டாயின. விளக்கமாகக் கூறுவதானால், தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டதால் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் உண்டாகவில்லை. இருப்பினும், சோதனையின்போது, 70% பேர் காய்ச்சல் அல்லது தலைவலியைப் பெற்றனர். அதை சரி செய்ய பாராசிட்டமால் பயன்படுத்தப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாரா கில்பர்ட் கூறும்போது, “கோவிட் -19 தொற்றுநோயை கட்டுப்படுத்த எங்கள் தடுப்பு மருந்து உதவுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் நிறைய ஆய்வுகள் செய்யப்பட உள்ளன, ஆனால் இந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட முடிவுகள் நம்பத்தகுந்ததாக உள்ளன,” என்றார்.
பரிசோதனையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன?
இந்த ஆய்வில் இதுவரை பெற்றுள்ள முடிவுகள் மிகவும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இந்த தடுப்பு மருந்து ஆய்வின் நோக்கமே, மக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பு மருந்தை வழங்குவதாகும். அதே சமயம், ஒரு தடுப்பு மருந்து மக்கள் நோய்வாய்ப்படுவதைத் தடுக்க அல்லது கோவிட் -19 இன் அறிகுறிகளைக் குறைக்க முடியுமா என்பதை ஆய்வில் காட்ட முடியாது. இங்கிலாந்தில் நடைபெறும் அடுத்த கட்ட சோதனைகளில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். இருப்பினும், இந்த சோதனை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தடுப்பு மருந்தின் செயல்திறன் பற்றி ஆய்வுகளை மேற்கொள்வது கடினமாக உள்ளது. அமெரிக்காவில் 30,000 பேரும், தென்னாப்பிரிக்காவில் 2,000 பேரும், பிரேசிலில் 5,000 பேரும் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய சோதனை திட்டமிடப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும்?
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் செயல்திறன் முழுமையாக இந்த ஆண்டு இறுதிக்குள் நிரூபிக்கப்படும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், இது பரவலாக கிடைக்க வாய்ப்பு இல்லை. கோவிட் -19 தொற்றினால் அதிக அபாயத்தில் இருப்பதாகக் கருதப்படும் நபர்கள், வயது அல்லது மருத்துவ நிலைமைகள் காரணமாக சுகாதார மற்றும் பராமரிப்புத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருப்பினும், எல்லாம் திட்டப்படி நடக்குமானால், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் பரவலான தடுப்பு மருந்து கிடைக்கலாம். இதைப்பற்றி போரிஸ் ஜான்சன் கூறும்போது, “வெளிப்படையாக கூறுவதானால், நான் 100% நம்பிக்கையுடன் இருக்கிறேன், இது மிகைப்படுத்துதல் என்றாலும், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு தடுப்பு மருந்தைப் பெறுவோம்.” என்றார்.
பிற தடுப்பு மருந்துகளின் ஆய்வுகளின் நிலை என்ன?
தற்போதைய இந்தக் கட்டம் ஆக்ஸ்போர்டின் தடுப்பு மருந்து மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள குழுக்களும் இதே போன்ற முடிவுகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்க நிறுவனமான மாடர்னா முதன்முதலில் ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும் என்ற முடிவுகளை வெளியிட்டது. அவர்களின் தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏவை (அதன் மரபணுக் குறியீடு) அடிப்படையாகக் கொண்டது. பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் நிறுவனங்களும் தங்கள் ஆர்.என்.ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்திற்கு சாதகமான முடிவுகளைப் பெற்றுள்ளன. சீனாவில் உருவாக்கப்பட்ட ஆக்ஸ்போர்டின் அதே போன்ற ஒரு நுட்பமும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த அணுகுமுறைகள் அனைத்தும் இதற்கு முன்னர் செயல்படுவதாக நிரூபிக்கப்படவில்லை. தடுப்பு மருந்தை உருவாக்க பாரம்பரிய முறைகளும் ஆராயப்படுகின்றன. வால்னேவா நிறுவனம் முழு கொரோனா வைரஸையும் எடுத்து, அதை செயலிழக்கச் செய்து பின்னர் ஊசி மூலம் செலுத்தவுள்ளது. உலகெங்கிலும் உள்ள மருத்துவ பரிசோதனைகளில் மொத்தம் 23 கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் உள்ளன, மேலும் 140 மருந்துகள் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் உள்ளன.
இங்கிலாந்துக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்குமா?
வெவ்வேறு தடுப்பு மருந்துகளை உள்ளடக்கி 190 மில்லியன் டோஸ் மருந்தைப் பெற இங்கிலாந்து அரசு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதில் பின்வருவன அடங்கும்:
- மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட வைரஸிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்துயின் 100 மில்லியன் டோஸ்கள்
- கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டின் ஒரு பகுதியை செலுத்தும் பயோடெக் / ஃபைசர் தடுப்பு மருந்துயின் 30 மில்லியன் டோஸ்கள்
- வால்னேவா செயலிழந்த கொரோனா வைரஸின் 60 மில்லியன் டோஸ்கள்
66 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டிற்கு நோய்த்தடுப்பு ஊசி போடுவதற்கு தற்போதைய தடுப்பு மருந்துகளின் வெற்றி நிச்சயமற்றதாக இருந்தாலும் இவற்றை வாங்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் தடுப்பு மருந்து பணிக்குழுவின் தலைவரான கேட் பிங்ஹாம் பிபிசியிடம் கூறும்போது, “நாங்கள் பல்வேறு பிரிவுகளில் நம்பிக்கைக்கு உரிய தடுப்பு மருந்துகளைத் தேர்ந்தெடுத்து ஒப்பந்தங்கள் செய்வதின் மூலம் எங்களுடைய தடுப்பு மருந்தை உறுதி செய்துக்கொள்கிறோம்” ” ஏனெனில் ஒரே தடுப்பு மருந்து அனைவருக்குமானதாக இருக்க முடியாது. “வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு தடுப்பு மருந்துகள் தேவைப்படலாம்.” எனவே, மருந்தின் இருப்பை உறுதி செய்ய பல்வேறு தடுப்பு மருந்துகளுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன” என்றார்.
Thank you: BBC
Author: James Gallagher