திருப்பதி:
திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாளை முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிரதான சாலை வழியாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி கோவில் முடப்பட்டு ஜூன் 10ஆம் தேதி மீண்டும் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. கொரோனா தொற்று அச்சத்தையும் மீறி இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்கள், தேவஸ்தான மற்றும் லட்டு தயாரிக்கும் ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், என மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.