டில்லி

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதி  மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் முதல் மூடப்பட்டன.   ஊரடங்கு காரணமாக இந்த பள்ளிகள் மூடல் தொடர்ந்து சுமார் 25 கோடி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனது.    ஒரு சில இடங்களில் மட்டும் ஆனலைன் வகுப்புக்கள் மற்றும் தொலைக்காட்சி வகுப்புக்கள் தொடங்கப்பட்டன.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 15 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பது குறித்து மாநில பிரதிநிதிகளுடன் வீடியோ மூலம் கூட்டம் ஒன்றை நடத்தியது.  இதையொட்டி மாநிலங்கள் அளித்த பதில்களை  அமைச்சகம் தொடுத்து வெளியிட்டுள்ளது.  இதில் அசாம் மாநிலம் மட்டும் ஜூலை இறுதியில் பள்ளிகளைத் திறக்க முன் வந்துள்ளது.   மொத்தமுள்ள 36 மாநிலங்களில் 21 மாநிலங்களில் முடிவு எடுக்கப்படவில்லை.

குறிப்பாக கொரொனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகள் எப்போது திறப்பது என முடிவு எடுக்கப்படவில்லை   டில்லி, பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.  ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் செப்டம்பர் வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் முடிவு குறித்த ஒரு தொகுப்பு இதோ

ஜூலை 31 : அசாம்

ஆகஸ்ட் :  டில்லி, அரியானா, பீகார்,சண்டிகர்

செப்டம்பர் : ஆந்திரா, கர்நாடகா, கேரளா, லடாக்,  மணிப்பூர், நாகாலாந்து, ராஜஸ்தான், அருணாசலப்பிரதேசம், ஒரிசா

முடிவு எடுக்காத மாநிலங்கள் : அந்தமான் நிகோபார், சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு, கோவா, குஜராத், இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லட்சத்தீவுகள், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, பஞ்சாப்,  சீக்கிம், தமிழகம், தெலுங்கான, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட்,   மேற்கு வங்கம்,