சென்னை: தமிழக தலைநகரில் ஜூலை 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் அதிகபட்சமாக 14030 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், தமிழக அளவிலும் அதிகபட்சமாக 51640 பேர் பரிசோதனைக்கு உள்ளானார்கள்.
ஞாயிறன்று, மொத்தம் 1254 பேருக்கு கொரோனா பாசிடிவ் உறுதிசெய்யப்பட்டது. மேலும், 1189 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஜூலை 2வது வாரத்திலிருந்த நிலை அப்படியே தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பாசிடிவ் எண்ணிக்கை 8.9 என்பதாக குறைந்தது. பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையிலிருந்து கணக்கிடப்படுவதாகும் இது. ஆனால், நிபுணர்கள் தெரிவிப்பது என்னவென்றால், பாசிடிவ் விகிதம் 5% அல்லது அதற்கும் கீழே சென்றால்தான் அது மிகவும் நல்ல செய்தி என்கின்றனர்.
சென்னையில், கிட்டத்தட்ட 5 லட்சம் பேரும், மாநிலமெங்கும் இதுவரை 18.55 லட்சம் பேரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.