சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாக சென்னை மாநகராட்சி கூறி வருகிறது.
சென்னையில் நேற்றும் 1,254 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,859 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 69,382 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,042 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,434 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 15 மண்டலங்களில் பாதிக்கப்பட்டோர் விவரங்களை வெளியிட்டுள்ள மாநகராட்சி, சென்னையில், இதுவரை 6 லட்சத்து 4 ஆயிரத்து 237 பேர் தனிமைப்படுத்துதல் காலத்தை நிறைவு செய்திருப்பதாக தெரிவித்து உள்ளது.
தற்போதைய நிலையில், 3 லட்சத்து 61 ஆயிரத்து 80 பேர் தனிமைப்படுத்துதல் காலத்தை தொடர்வதாகவும், நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 11 ஆயிரத்து 619 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 148 பேர் போலியான முகவரி விவரங்களை அளித்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Patrikai.com official YouTube Channel