கோவை: 2020-21ம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரி முதலாமாண்டு சேர்க்கைக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாணவர் சேர்க்கை இம்முறை ஆன்லைன் மூலமே நடைபெறுகிறது. அனைத்து சான்றிதழ்களும் ஆன்லைன் மூலமே சரி பார்க்கப்படும்.
இந் நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமானது முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து உள்ளது.
விண்ணப்பம் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை http://www.tnauonline.in/ என்ற இணையதளத்தின் வழியாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel