பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ஊரடங்கு விதிகளை மீறிய மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை வினியோகித்த பிரபல தனியார் கல்லூரியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது. ஆகையால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் பிரபலமான தனியார் கல்லூரியில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பம் வாங்க வந்தனர்.
எனவே அந்த கல்லூரி முன்பு கூட்டம் அதிகமானது. கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக உதவி ஆட்சியர் வைத்திநாதன் மற்றும் வருவாய்துறையினருக்கு புகார்கள் பறந்தன.
இதையடுத்து அந்த தனியர் கல்லூரிக்கு சென்ற பறக்கும் படை தனிக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் கூட்டமாக நின்று கொண்டு இருந்த மாணவர்களை அவர்கள் அப்புறப்படுத்தினர்.
பின்னர் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக அந்த கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். ரூ.1லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.