சென்னை:
தனியார் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் விண்ணப்ப விநியோகத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. வரும் 20ந்தேதி முதல் ஆன்லைன் மூலமே விண்ணப்பம் விநியோகம் செய்ய வேண்டும் என்று அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 20ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை நேற்று அறிவித்தது

தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. அதுபோல ஏராளமான தனியார் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
பொதுவாக விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணங்களை வங்கி வரைவோலையாக இணைத்து தபாலிலோ நேரிலோ சமர்ப்பிப்பார்கள்.
ஆனால், கொரோனா தடுப்பு காரணமாக, விண்ணப்பங்களை ஆன்லைன் மட்டுமே பெற வேண்டும் என அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு தமிழக உயர்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் ஏற்கனவே பல தனியார் கல்லூரிகள் விண்ணப்பங்களை கொடுத்து வரும் நிலையில், அதை உடனடியாக நிறுத்துமாறும், 20ந்தேதிக்கு பிறகே ஆன்லைன் முலம்விண்ணப்பம் விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழக கல்லூரி கல்வி இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel