சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் மாவட்டங்களில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்த கொரோனா தற்போது சில மாவட்டங்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதற்காக காரணமாக, சென்னையில் இருந்து சொந்தஊர் திரும்பியவர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது. மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, செங்கல்பட்டு , திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. இதனால், பல மாவட்டங்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 4:30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.