டில்லி

ற்ற மாநிலங்களை விட குறைந்த அளவில் கொரோனா பரிசோதனை நடக்கும் பீகார் மாநிலத்தில் அதிக விகிதத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனா பரவுதலுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை.   எனவே பரிசோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகிய முறை பின்பற்றப்படுகின்றன.  நாடெங்கும் தற்போது கொரோனா பரிசோதனைகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன.   தற்போது ,மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளன.

இதில் 3 லட்சம் பரிசோதனைகள் வரை பாதிப்பு விகிதங்கள் 4%க்கும் குறைவாகவே உள்ள மாநிலங்கள் மத்தியப் பிரதேசத்தில் 3.9%, ஒரிசாவில் 3.7%, தமிழகத்தில் 3.4%, மேற்கு வங்கத்தில் 3.2%, உத்தரப்பிரதேசத்தில் 2.7%, ராஜஸ்தானில் 2.2%, கேரளாவில் 2.16% காஷ்மீரில் 2%,  பஞ்சாப் மற்றும் அசாமில்1.8%, ஆந்திராவில் 0.84% என உள்ளன.

ஆனால் பீகார் மாநிலத்தில் இந்த சதவிகிதம் 5.7% ஆக உள்ளன.  இதுவரை இம்மாநிலத்தில் 3.3 லட்சம் சோதனைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.,  எனவே இவ்வகையில் அதிக பாதிப்பு உள்ள மாநிலமாகப் பீகாரைச் சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.   குறிப்பாகப் பீகாரில் பாட்னாவைச் சுற்றி உள்ள மாவட்டங்களில் 4% முதல் 15% பாதிப்பு உள்ளது.

பீகார் மாநிலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 316 எனச் சோதனை நடந்துள்ளது.   பல மாநிலங்களில் ஒரு லட்சம் பேருக்கு 550 எனச் சோதனை நடந்துள்ளது.   நாட்டின் மொத்த அடிப்படையில் ஒரு லட்சம் பேருக்கு 997 சோதனை நடந்துள்ளன.