நியூயார்க் பத்திரிகை செய்தி நிறுவனம் ஆசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் 100 பேர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது. இவர்களில் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இடம்பிடித்திருக்கிறார். அதேபோல் நடிப்பு, இசை, பாடல் என பன்முக தன்மை கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனும் இடம் பிடித்திருக்கிறார்.

மேலும் பென்னி தயால், சானியா மிர்சா, சாய்னா நேவால் மற்றும் வாசிம் அக்ரம் போன்றவர்களும் இந்தபட்டியலில் அடங்குவர்.
ஏ.ஆர்.ரஹ்மான தற்போது இசை அமைத்துள்ள தில் பெச்சாரா இந்தி படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மணி ரத்னத்தின் ‘பொன்னியன் செல்வன்’, விக்ரமின் ‘கோப்ரா’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ மற்றும் தனுஷ் நடிக்கும் இந்திபடம் ‘அட்ரங்கி ரே’ ஆகிய படங்களுக்கும் ரஹ்மான் இசை அமைக்கிறார்.

ஆசியாவில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டிலில் இடம் பிடித்திருக்கும் ஸ்ருதி கூறும்போது,’ “ஆசியா 2020 இல் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக நான் தேர்வு செய்யப் பட்டதை எண்ணி பெருமை கொள்கிறேன் அதற்காக தேர்வு குழுவுக்கு நன்றி’ என தெரிவித்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசனை தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்திலும், ரவி தேஜாவுடன் தெலுங்கில் கிராக் படத்திலும் நடித்திருக்கிறார்.
#