சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வாழ்வாதாரம் இழந்துள்ள தங்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நிதி மன்றம் தமிழகஅரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,51,820 ஆக உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80,961 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 64,036 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,606 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவுக்கு ஆண்கள் 57.89 சதவீதம் மற்றும் 42.11 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சேசுபாலன் என்பவர் சென்னையில் உள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை, அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், இ-பாஸ் குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே வழங்கப்படுவதால் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கமாறும் அவர்களுக்கு உணவு, உறைவிட வசதியை ஏற்படுத்தி கொடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. அதையடுத்து, மனு தொடர்பாக க தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.