சென்னை:
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி அரசு சார்பில் எழுதப்பட்ட கடிதத்திற்கு மத்தியஅரசிடம் இருந்து இதுவரை பதில் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை  எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபா:ஸ்கர், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் உணவுகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில்  400 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் கூறினார்.
தமிழகம் முழுவமும் 1606 கர்ப்பிணி பெண்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 1104 பேர் குணமடைந்துள்ளதாகவும் தொற்று இல்லாத கர்ப்பிணிகளுக்கு தனி படுக்கைகள், தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சித்தா, ஆயுர்வேதா போன்ற பிற சிகிச்சைகளில் பிளாஸ்மா சிகிச்சை மட்டும்  வெற்றிகரமாக செயல்படுவதாகவும், முதியவர்களுக்கான பிசிஜி தடுப்பு மருந்து சோதனை அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு மத்தியஅரசுக்க  எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை  பதில் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]