சென்னை:
இந்துக்களின் தெய்வமான தமிழ்க்கடவுள் முருகனின் கவசமான கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தும் நோக்கில் விளக்கம் தெரிவித்து, கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனலில் வெளியிட்டு, மத துவேசத்தை தூண்டிய சுரேந்திரன் இன்று புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண்டைந்தார்.
கறுப்பர் கூட்டம் என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒரு குழுவினர், கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறி வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு புகார்களும் பதியப்பட்டன.தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, புகாரின் பேரில் போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையில், கறுப்பர் கூட்டம் சேனல் தொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன், என்பவரை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண்டைந்தார்.