பிரேசிலியா
பிரேசில் அதிபர் ஜைர் பொல்சொனாரோவுக்கு நடந்த பரிசோதனையில் மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது
பிரேசில் நாட்டு அதிபர் ஜைர் பொல்சொனரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 7ஆம் தேதி நடந்த சோதனையில் இது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா என்பது கொள்ளை நோய் அல்ல ஒரு சிறு வகை ஃப்ளூ காய்ச்சல் என அவர் கூறி வந்தார்.
ஆயினும் அவருக்கே பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
தமக்கு விரைவில் குணமாகும் எனவும் மீண்டும் பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது தெரிய வரும் எனவும் அவர் கூறி வந்தார்.
மேலும் தாம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் பரிசோதனைக்குப் பிறகு பணியைத் தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா உள்ளது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.