சேலம்:
சேலம் கந்தம்பட்டி இளம்பிள்ளை சாலை சந்திப்பில் நான்கு வழிச்சாலையில் புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (புதன்கிழமை) திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அந்த பாலத்தில் பயணம் செய்தார்.

3நாள் பயணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு செல்லும் முதல்வர் அங்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். முன்னதாக இன்று காலை கிருஷ்ணகிரி ஆட்சியர் அலவலகத்தில் கொரோனா ஆய்வு குறித்து அய்வு நடத்தி, கொரேனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உத்தரவிட்டார்.
பின்னர் அங்கிருந்து சேலம் சென்றவர், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி இளம்பிள்ளை சாலை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்து, கொடியசைத்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கினார்.
சுமார் ரூ.33 கோடி நிதியில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்துக்கு முதல்வர் எடப்பாடி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டிய நிலையில், பாலம் கட்டும் பணி இரவு பகலாக நடைபெற்று முடிந்தது.
அதையடுத்து, இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் மேம்பாலம் வழியே அரசு பேருந்துகள் செல்வதை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதே விழாவில் அயோத்தியாப்பட்டணம் பேளூர் கிளாக்காடு சாலை பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தையும் தமிழக முதல்வர், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
Patrikai.com official YouTube Channel