மும்பை: மகாராஷ்டிராவில் ஊரடங்கால் ஏற்பட்ட கடன் தொல்லையால், மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப். அவரது மனைவி பெயர் மயூரி. ஆதித்யா, ஆயுஷ் என 2 குழந்தைகள் உள்ளனர். ஓட்டல் தொழில் நடத்தி வந்த அமோல் அதிக கடன் வாங்கி, ஒரு கட்டத்தில் அதை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார்.
கொரோனா ஊரடங்கால் அவரது ஓட்டல் தொழிலிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. கடுமையான மன அழுத்தத்தில் இருந்த அமோல், மனைவி மற்றும் 2 கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, இந்த விவரத்தை உறவினர்களுக்கு போனில் கூறி உள்ளார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர் வீட்டுக்கு வந்து பார்க்க, அமோலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது கடன் தொல்லை காரணமாக இந்த முடிவை அமோல் எடுத்தது தெரியவந்தது.
Patrikai.com official YouTube Channel