சென்னை:
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சென்னையில் பிரபலங்கள் வசித்து வரும் போயஸ் கார்டனில் முன்னாள் முதல்வரும் மறைந்த அதிமுக தலைவருமான ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் என்ற வீடு உள்ளது. அவர் அங்குதான் வசித்து வந்தார்.
அவரது மறைவிற்கு பிறகு, அவர் வாழ்ந்து வந்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போயஸ் கார்டன் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்க மாற்ற தடை யில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.