சென்னை:
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று மாலை 6 மணி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அனைத்த கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடங்கிய நிலையில், ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் செயல்பட காலதாமதமாகி உள்ளது.
இந்த நிலையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை, பாடம் எடுத்தல் போன்ற நிகர்வுகளை தொடங்கி உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித் தஉயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தமிழகத்தில் இன்ஜினீயரிங் படிப்புக்காகான விண்ணப்பம், இன்று மாலை 6 மணி முதல் வெளியாகிறது. மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்படும் என்றார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று கூறியவர், தமிழகம் முழுவதும் 465 பொறியியல் கல்லூரிகள் உள்ளன , ஆனால் மொத்த இடங்கள் எத்தனை என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.