இந்த மனுமீதான கடந்த விசாரணையின்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கப்படவில்லை, புதிதாக மின் கணக்கீடு செய்யப்படும்போது ஏற்கெனவே செலுத்திய தொகையை கழித்துக்கொண்டு புதிதாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தவித தவறும் இல்லை என்று கூறியது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, வழக்கு தொடர்பாக அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நிதிபதிகள், மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.