சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதி கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து யாரும் வேளியேறாதவாறும், உள்ளே புகாதபடியும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.


சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைந்து வருகிறது. 50 கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்த தண்டையார்பேட்டை மண்டலத்தில் தற்போது ஒரே ஒரு பகுதி மட்டுமே கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளது.
சென்னையில் தற்போதைய நிலையில், 213 கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்தாலும், 50 கொரோனா  கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்த தண்டையார்பேட்டை மண்டலத்தில், தற்போது ஒரே ஒரு பகுதி மட்டுமே கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
தமிழகஅரசு கடந்த ஜூன் மாதம் 26 தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி,  தமிழ்நாட்டில்   1089 கொரோனா கட்டுப்பாட்ட பகுதிகள்  காணப்பட்டன.   அதிகபட்சமாக சேலத்தில் 184 இடங்களும், சென்னையில் 158 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் கட்டுப்பாடுகள் பகுதிகளில் அதிகரிக்கப்பட்டன.
அதன்படி, சென்னையில் மட்டும் 276 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 134 பகுதிகளும்,  அண்ணா நகர்  38 கட்டுப்பாட்டு மண்டலங்களை யும், தண்டையார் பேட்டை  (மண்டலம் 4) 50 பகுதிகளும் அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில், தற்போது தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. அங்கு தற்போது ஒரே ஒரு பகுதி மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக  இருப்பதாகவும் இங்கு 12 சதவிகிதம் பேரே கொரோனா பாதிப்பில் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னையில் தற்போது கட்டுப்பாட்டு பகுதியாக 213 பகுதிகள் உள்ளன.