சென்னை:
பெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்த நாயையொட்டி, சென்னை கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 118ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறத. இதையொயொட்டிச் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சிலைக்கு கீழே அவரது உருவபடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு ப்பட்டிருந்தது.
இன்று காலை அங்கு வந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காமராஜர் பிறந்தநாளையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், 1954ஆம் ஆண்டில் காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், தமிழ்நாட்டின் பட்டிதொட்டி யெல்லாம் பள்ளிக்கூடங்களை அமைத்து, தமிழ்ச் சமுதாயத்தைப் படிப்பறிவுமிக்க அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கினார்.
பல தொழிற்சாலைகளை நிறுவித் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டதுடன், தமிழகத்தில் நீர்வள மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாட்டில் பல அணைகளைக் கட்டிய பெருமைக்குரியவர். எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராஜர் முதலமைச்சர் பதவியையும் துறந்து நாட்டுக்காகப் பணியாற்றியவர் என குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel