டெல்லி:
ந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலையில்,  கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3% ஆகவும்,  உயிரிழப்பு 2.6% ஆக இருப்பதாகவும்  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி,  இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  9,36,181 ஆக அதிகரித்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 582கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை  உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,309 ஆக உயர்ந்துள்ளது.
இது நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பு விகிதம் 2.6 சதவீதம்.
இதுவரை 5,92,032 பேர் கொரோனா  தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.  இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோர்எ ண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்  குணமடையும் விகிதம் 63.3 சதவீதமாக உள்ளது. 
தற்போதைய நிலையில், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,19,840 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 267665 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 149007 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 10695  பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 147324 பேருக்கும், டெல்லியில் 115346 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.