திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.
தொடக்கத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாக இருந்த கேரளாவில் சில வாரங்களாக பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடக்கத்தில் 100 என்ற அளவில் இருந்த கொரோனா மெதுவாக இப்போது 500 கடந்து அதிர்ச்சியை தருகிறது.
உச்சபட்சமாக இன்று ஒரு நாளில் மட்டும் 608 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. அதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 8,930 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் 4,454 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை 4,441 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35 என்றும், கேரளாவில் இறப்பு விகிதம் 0.39% ஆக உள்ளது என்றும் பினராயி விஜயன் கூறினார்.
Patrikai.com official YouTube Channel