சென்னை:
சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் காவல் ஆய்வாளரும் ஒருவர்.

சென்னையில்  சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக  குறைந்து வருகிறது. நேற்று  ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்  பாதிக்கப்பட்டவர்கள் மொத்த  எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58,615 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய  நிலையில், 17,469 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,253 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 10 மணி வரை இடைப்பட்ட 16 மணி நேரத்தில் மேலும் 15 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்துள்ளவர்களில்,  காவல்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி(55) என்பவரும் ஒருவர். இவர் மீனம்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தார் எஸ்.ஐ. குருமூர்த்தி மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறையில் போலீசார் உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது.