சிங்கப்பூர் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளில் பரவி மக்களை வேட்டை யாடி வருகிறது. சிங்கபூரில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம், ஓராண்டு வரை சிறை உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. மேலும் பொது நிகழ்ச்சியில் 10பேர் மட்டும கலந்துகொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுய்ளளது.
சிங்கப்பூரில் தற்போதைய நிலையில் 46,283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவ9ர 42,541 பேர் தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 3,716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் கிம் கீட் சாலையில் வசித்து வந்த இந்தியரான நவ்தீப் சிங் என்பவரின் குடும்பத்தினர் வீட்டில் நடைபெற்ற விருந்துக்கு பலரை அழைத்துள்ளனர். இதில் விதிகளை மீறி பலர் கலந்துகொண்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், விருந்தில் கலந்துகொண்ட கல்வி மற்றும் பணி விசாவில் அங்கு தங்கியுள்ள உள்ள ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் உள்பட மொத்தம் 10 பேரை கைது செய்து, கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு மாறாக கூட்டம் சேர்ந்ததாக வழக்கு பதிந்த நிலையில், அவர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மீண்டும் நாட்டுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது