சென்னை:
மிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனாபரவல் கடந்த மாதம் உச்சத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக தொற்று பவரல் குறைந்திருப்பது சோதனைகளின் முடிவில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை கொடுங்கையூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அதிமுக சார்பில்  500க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசியப் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதனால் நோய்த்தொற்று குறைய ஆரம்பித்துள்ளது என்றார்.
மேலும்,  தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக  கடந்த 3 மாதங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு  உள்ளதாகவும்  தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.