இனிமையான பாடல்களை தமிழ் திரையுலகுக்கு படைத்து வந்த நா.முத்துக் குமார் திடீரென்று இடி விழுந்ததுபோல் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மரணம் அடைந்தார்.

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை யொட்டி அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை
என் தந்தை
==========
என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.
அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்
என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்
அவர் எங்கள் காட்டில் சிங்கம்
என் தந்தையின் வரிகள் முத்து
அவர்தான் எங்களின் சொத்து
என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்
அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்
என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா
எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா
எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா
இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா
இவ்வாறு மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார் எழுதி உள்ளார். புலிக்குபிறந்தது பூனையாகுமா? கவிக்கு பிறந்த்து சோடைபோகுமா? போகாது! அதுவும் ஒரு கவியாக மாறும் என்பதை நிரூபித்திருக்கிறார் முத்துக்குமார் மகன்.
Patrikai.com official YouTube Channel