சென்னை:
இளைஞர்களிடையே மோகத்தை ஏற்படுத்தி உள்ள ஆன்லைன் விளையாட்டான பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தமிழக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.க நகரில் இன்று கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர். அங்கு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு கப சுர குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினி வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிம் பேசியவர், “இலவச இ-பாஸ் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தவர், தென்மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடமாடும் காய்ச்சல் முகாம் மூலம் கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார்.
அப்போது செய்தியாளர்கள், இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளே என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், மத்தியஅரசின் முடிவை வரவேற்பதாகவும், அதேவேளையில், இளைஞர்களை சீரழித்து வரும் பப்ஜி விளையாட்டையும் தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம்” என்று பதிலளித்தார்.
மாணவர்கள், இளைஞர்கள் உள்பட அனைவரையும் பப்ஜி கேம் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருவதாகவும் கூறினார்.