சென்னை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  நோய் பரிசோதனைக் கருவிகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்று வருகிறது.

தற்போது நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது.   இந்த வைரஸ் தொற்றுக்குச் சளி, காய்ச்சல் , இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளன.   ஒரு சிலருக்கு எவ்வித அறிகுறியும் இன்றி கொரோனா தொற்று ஏற்படுகிறது.   இவர்களுக்கு நோய் தீவிரமடையும் வரை கண்டுபிடிக்க முடியாமல் போவதால் உயிரிழப்புக்கள் உண்டாகிறது.  எனவே பலரும் தங்கள் வீடுகளில் நோய் பரிசோதனைக்  கருவிகளை வைத்து சோதனை செய்யத் தொடங்கி உள்ளனர்.

இவற்றில் பொதுவாக தெர்மாமீட்டர் பலரும் பயன்படுத்துகின்றனர்.   இது காய்ச்சல் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது.  பலரும் ஜுரம் மற்றும் சளி, இருமல் உள்ளோருக்குக் காய்ச்சல் ஏற்படும் போது பலரும் காய்ச்சலுக்கான மருந்துடன் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.    இது அறிகுறி உள்ளவர்களுக்கானதாகும்.

ஆனால் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு உள்ளோர் பெரும்பாலும் ஹைபோக்சியா எனப்படும்  ரத்தத்தில் ஏற்படும் ஆக்சிஜன் குறைபாட்டால் பாதிப்பு அடைகின்றனர்   இந்த ஆக்சிஜன் குறைபாட்டால் மூச்சுத் திணறல் ஏற்படுவதும் நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்வதும் உண்டாகி விடுகிறது.   இது மூச்சு விடுவதில் மேலும் மேலும் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

ஆக்சிஜன் குறைபாட்டை உடனடியாக கண்டறிவதற்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் அவசியமாகும்.   இது ஒரு கையடக்க கருவியாகும்.  இதை விரலில் பொருத்திக் கொண்டு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை தெரிந்துக் கொள்ளலாம்.  பொதுவாக ஆக்சிஜன் சிறிது குறைந்தாலே மூச்சுத் திணறல் ஏற்படும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு அபாய நிலைய எட்டியபிறகே மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.  எனவே பலரும் தற்போது பல்ஸ் ஆகசி மீட்டரை வீடுகளில் வைத்துள்ளனர்.