மலையாள நடிகை அனார்கலி மரிகரின் சமீபத்திய போட்டோஷூட் சர்ச்சைக் குரியதாக மாறியுள்ளது. காளி தெய்வ மாக மேக் அப் அணிந்து அவர் போட்டோஷூட் நடத்தினார். அதற் கான வீடியோவில் அவரது உடம்பில் கறுப்பு வர்ணம் தீட்டுவதுபோல் மேக்கப் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை கண்டு நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்திருக்கின்றனர்.

இனவெறி மற்றும் தோல் நிறத்தில் பாகுபாடு காட்டுவதுபோல் காட்சிகள் அமைப்பதா? அதற்கு நடிகையாக அனார்கலி எப்படி போஸ் தரலாம் என கேட்டிருக்கின்றனர்.
நெட்டிஸன்களின் எதிர்ப்பை கண்டு அதிர்ச் சிஅடைந்த அனார்கலி அதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
“எனது ஆழ்ந்த மன்னிப்பு. நானும் ஒரு பகுதியாக மாறிய பிரபலமான கலாச் சாரத்தில் இத்தகைய இனவெறி மற்றும் சாதி போக்குகளைப் பற்றி நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன். புகைப் படங்களை நான் மறுபதிவு செய்ய மாட்டேன், எந்த வகையிலும் விளம்பரப்படுத்த மாட்டேன் என புகைபடக்காரருக்கு தெரிவித்துள்ளேன் ”என்று அனார்கலி குறிப்பிட்டுள்ளார்.
அனார்கலி மலையாளத்தில் ஆனந்தம், விமானம் உயரே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel