ஜெனிவா:
சாத்தான்குளம் தந்தை மகன், காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா கட்டர்ஸ்  வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்  மொபைல் போன் கடையை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோர், ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்ததால், காவல்துறை யினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் நடைபெற்ற கறுப்பின நபர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையுடன் ஒப்பிட்டு, கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே ஐ.நா. சபை தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தது. இது தொடர்பான வழக்கில் இதுவரை 10 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது.
இன்று முதல் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது,  ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் அவரது உதவியாளர் ஸ்டீபன் துஜாரிக் செய்தியாளர்களை சந்தித்தபோது, சாத்தான்குளம் இரட்டைக் கொலை குறித்து ஊடகவியவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில்அளித்த செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்,  சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் பொலிஸாரினால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென ஐ.நா.பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்ததாகவும்,  இவ்வாறான ஒவ்வொரு கொலைகள் தொடர்பாக கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விரும்புகிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசியா மனித உரிமைகள் கண்காணிப்பகம்  இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறுகையில், “ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டதற்கு உலகம் திகிலுடன் பதிலளிப்பதால், பொலிஸ் சீர்திருத்தம், பொறுப்புக்கூறல் மற்றும் முடிவுக்கு வருவதை உறுதி செய்வதற்கான வலுவான முயற்சிகளை இந்தியாவில் அதிகாரிகள் மேற்கொள்வது அவசியம்,  என்று தெரிவித்தவர் சாத்தான்குளம் சம்பவம் குறித்தும் கடுமையாக விமர்சித்திரந்தார்.
“பல நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் கைது நடைமுறைகள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த இரண்டு மரணங்கள், ‘ஒருவருக்கு ஒரு பாடம் கற்பிக்க’ உரிமை உண்டு என்று காவல்துறை அதிகாரிகள் எவ்வாறு நம்புகிறார்கள் என்பதை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளனர்.
சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து, அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா நிர்வாக இயக்குனர் அவினாஷ் குமார், “ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரின் மரணங்கள் இந்தியாவின் பொலிஸ் கடமை செய்வதில் இருந்து தொடர்ந்து தோல்வியுற்றதை மீண்டும் சமிக்ஞை செய்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

“2018 தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் தரவுகளின்படி, காவலின்போது மரணம் அடைவதில் தமிழகம்  இரண்டாவது  இடத்தில் இருப்பதாகவும் கூறினார்.
சாத்தான்குளம் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை தண்டிப்பதன் மூலமும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலமும் அது உறுதியான தீர்மானத்தைக் காட்ட வேண்டும். ”
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச சட்டத்தில் சித்திரவதை சட்டவிரோதமானது என்றாலும், அவை இந்திய சட்டத்தின் கீழ் தனித்துவமான குற்றங்களாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை, என்றார்.
“சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சைக்கு எதிரான ஐ.நா. மாநாட்டில் இந்தியா 1997 இல் கையெழுத்திட்டது, ஆனால் இதுவரை உள்நாட்டில் அது தொடர்பான  சட்டத்தை நிறைவேற்றவில்லை. சித்திரவதை தடுப்பு மசோதா மக்களவையால் 2010 இல் நிறைவேற்றப்பட்டது, ஆனால் மாநிலங்களவை நிறைவேற்றாமல் கடந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.