சென்னை:
மிழகத்தில் கொரேனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதுவரை  1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும்   74,969 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7893 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 152 பேர் உயிரிழந்துள்ளனர்,  3127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்  4355 பேர் குணமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும்  333 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 6,408-ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 2554 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 3736 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளதாகவும், 118 உயிரிழந்து இருப்பதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா  பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,257-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 42 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 1260 போர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 1957 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம்
வேலூரில் மாவட்டத்தில் இன்று மேலும் 134 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதனால்  மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,774 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 1293 குணமடைந்து இருப்பதாகவும், 1,456 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொரோனாவுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில், இன்று காலை நிலவரப்படி மேலும் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  5 ஆயிரத்து 652 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரத்து 250 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 4 ஆயிரத்து 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  101 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 120 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பானது, ஆயிரத்து 671 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், 777 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், 765 பேர் குணமடைந்து வீடு திரும்பி  இருப்பதாகவும், 11 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர் என்று மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம்:
விருதுநகர் மாவட்டத்தில் இன்று  மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த  பாதிப்பு எண்ணிக்கை 1,951-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நோய்க்கு சிகிச்சை பெறுவோர்-1167, குணமடைந்தோர்-784.
தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 154 பேருக்கு புதிதாக  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 1,649-ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், 1130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1130 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 20 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.