சென்னை:
7 வகையான சித்த மருத்துவ மருந்துகளை கொரோனா தடுப்பு சிகிச்சைக்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அலோபதி மருந்துகளை விட சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா மருந்துகள் நல்ல பலனை தருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மருந்துகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கிகாரம் கொடுப்பதில் இந்திய மருத்துவ கவுன்சில் பாரபட்சம் காட்டி வருகிறது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றமும் கடுமையாக சாடியிருந்தது.
இந்தநிலையில், கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ மருந்துகள் ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக தமிழ் பண்காட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் இன்று சித்த மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்,
கொரோனா தருப்புக்கு பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக்கூடியது. தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனை நிரூபிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது. பிற மாவட்டங்களிலும் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சென்னையில் நோய் தொற்று அதிகமாக இருந்த தண்டையார்பேட்டை மண்டலத்தில் இதுவரை 80% பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.