சென்னை:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவர், டிரைவருக்கும், பயணிகளுக்கும் இடையே பிளாஸ்டிக் பேப்பரைக்கொண்டு மறைத்து அசத்தலாக நடவடிக்கை எடுத்துள்ளார். டிரைவரில் புத்திசாலித்தனமான நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து பெரும்பாலான ஆட்டோடி டிரைவர்கள் இந்த நடைமுறையை பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், நடுத்த மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்காக பல்வறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்ட உள்ளன. இதனால், கடந்த 3 மாதமாக வாழ்வாதாரம் இழந்த வாடகை ஆட்டோ, டாக்சிகள் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில், ஆட்டோவில் சவாரி செய்யும் பயணிகள் மூலம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், ஆட்டோரிக்சா ஓட்டுநர்கள் பயணிகள் தங்கள் வாகனங்களுக்குள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை கெருகம்ம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நிமேஷ் குமார் சமீபத்தில் தனது ஆட்டோவில் ஒரு பிளாஸ்டிக் தாளை வைத்து, டிரைவருக்கும், பயணிகளுக்கும் இடையே மறைப்பு ஏற்படுத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டார். இதையடுத்து, பல ஆட்டோ டிரைவர்களும் அவரது பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக, பலரும் மெக்கானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துணை கடைகளை அணுகத் தொடங்கி யுள்ளனர், ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் பின் பிளாஸ்டிக் கவசங்கள் அல்லது திரைச்சீலை நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பயணிகளுக்கு சானிடைசர் வழங்குவதுடன் அவர்கள் முகக்கவசம் அணியும்படியும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து கூறிய சில ஆட்டோ டிரைவர்கள், கொரோனா பரவலில் இருந்து தங்களையும், பயணிகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம், எங்களுக்கு தற்போது அரசு வாகனங் களை இயக்க அனுமதி வழங்கி உள்ளதால், நாங்களும் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது.
சவாரி செய்யும், ஆட்டோவில் ஏறும் பயணிகள் பலருக்கு கொரோனா பயம் உள்ளது. அவர்களின் பயத்தை போக்கும் வகையிலும், பாதுகாப்பு காரணமாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை செய்து வருகிறோம், இந்த மாற்றங்களைச் செய்யாவிட்டால், வாடிக்கையாளர்களைப் பெற முடியாது. தறபோதைய நிலையில் கொரோனாவில் இருந்து தப்பிக்க இதுதான ஒரே வழி என்று கூறியுள்ளனர்.