கொரோனா சாக்லெட் தயாரித்த ஆலைக்கு ‘’சீல்’’..

                                                    மாதிரி புகைப்படம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ’எம் & என்’ என்ற பெயரில் சாக்லெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.;

’’இங்குத் தயாரிக்கப்படும் கருப்பு சாக்லெட்டுகளை சாப்பிட்டால் உடம்பில் கொரோனா எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்’’ என்று அந்த ஆலை விளம்பரம் செய்து ,தனது தயாரிப்பு சாக்லெட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளும் அந்த ஆலைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

‘’ இங்குத் தயாரிக்கப்படும் சாக்லெட் கொரோனாவை தடுக்கும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?’’ என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

ஆலை ஊழியர்கள் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை.

இதையடுத்து அந்த சாக்லெட் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அந்த ஆலை ‘பேக்கரி மற்றும் பிஸ்கெட் ‘’ தயாரிப்பதற்கு மட்டும் ’லைசென்ஸ்’  வாங்கி வைத்துக்கொண்டு சாக்லெட் தயாரித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

’’கொரோனாவை குணமாக்கும்’’ சாக்லெட்டுகளை பரிசோதனைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

’பரிசோதனை அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

-பா.பாரதி.