கன்னியாகுமரி:
ன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேர் மரணமடைந்துள்ளனர். தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த வாலிபரும் மரணம் அடைந்ததால் பரபரப்பு நிலவுகிறது.

வெளிநாடு, மற்றும் சென்னை உட்பட வெளியூர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். துவக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா கடந்த இரு வாரங்களாக வேகமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஒரு வாரமாக தினமும் 100 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 24 மணி நேரத்தில் 103 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில், குளச்சல் மார்த்தாண்டம் சந்தைகளுக்கு வந்து சென்ற பலருக்கு கரோனா தொற்று «ற்பட்டுள்ளது. மேல்புறத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ள்ம அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், குலசேகரம், குளச்சல் உட்பட மாவட்டம் முழுவதும் நகரம், கிராம பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 3 பேர் மரணம் அடைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.