புதுடெல்லி:

ல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ‘மாணவர்களுக்காக பேசுங்கள்‘ என்ற ஆன்லைன் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில், ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-

கொரோனா, ஏராளமான மக்களுக்கு தீங்கு இழைத்துள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஐ.ஐ.டி., கல்லூரிகள் ஆகியவை தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களை மேல்வகுப்புக்கு அனுப்பியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு குழப்பத்தை உண்டாக்கு கிறது. எனவே, மானியக்குழுவும் தேர்வுகளை ரத்து செய்து, முந்தைய தேர்வு அடிப்படையில் தேர்ச்சி அளிக்க வேண்டும்.

இந்த கொரோனா காலத்தில் தேர்வு நடத்துவது நியாயம் அல்ல. மாணவர்களின் குரலை மானியக்குழு காது கொடுத்து கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.